அண்மையில் ஒரு நாள்..
சுட்டெரிக்கும் வெய்யில்
கந்தல்மூட்டை கிழவர் ஒருவர்
கொப்பளிக்கும் கால்களை
சாலையோரச் சாக்கடையில்
நனைத்து நனைத்து
நடந்தார் நகர்ந்தார்....
ஓடும் பேருந்திலிருந்து
ஒரு கரம் செருப்புகளிரண்டை
வீசக் கண்டேன்;
ஒன்று சாக்கடை நீரில்,
மற்றது எதிரில் வந்த
வாகனத்தின் மீது..
இயந்திர வாழ்க்கையிலும்
எஞ்சி நிற்பது மனிதம்தானே!
மனிதரை நேசிப்போம்
மதம், மொழி, இன பேதங்களுக்கப்பால்
மனிதரிடத்து மரங்களைப் பிரித்து
மனிதரை நேசிப்போம்
மனிதராய் வாழ்வோம்
இரத்தம் ஒரே நிறம்
இன்றேனும் புறப்படுவோம்
புதியதோர் உலகம் செய்வோம்!
No comments:
Post a Comment